மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 19 நவ 2019

சொத்துகளை விற்கும் ஏர் இந்தியா!

சொத்துகளை விற்கும் ஏர் இந்தியா!

ஏர் இந்தியா நிறுவனம் தனது ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளது.

இந்திய பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா மிகக் கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுமார் ரூ.50,000 கோடி வரை இந்நிறுவனத்துக்கு கடன் உள்ளது. இதனால் ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கான முயற்சியிலும் ஒன்றிய அரசு ஈடுபட்டது. மிகுந்த கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியாவின் பங்குகளைக் கைப்பற்ற எந்த தனியார் நிறுவனமும் முன்வரவில்லை. இதனால் அத்திட்டத்தை தற்போதைக்கு கைவிட்டு ஏர் இந்தியாவை கடனிலிருந்து மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான சொத்துகளை விற்பனை செய்து கடனை ஈடுகட்ட ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் ஃபிளாட்டுகள் என ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்யப்பட்ட ரூ.980 கோடி மதிப்பிலான ஈக்குவிட்டி முதலீடு மற்றும் ரூ.2,000 கோடியாக உயர்த்தப்பட்ட வங்கிக்கடன் போன்றவற்றால் சற்று நிவாரணம் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon