மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

புதிய பெட்ரோலியக் கொள்கை!

புதிய பெட்ரோலியக் கொள்கை!

பெட்ரோலியம் மற்றும் ரசாயனத் துறைகளுக்கு ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

பெட்ரொகெமிக்கல் மற்றும் ரசாயனத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த கொள்கைத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது என்று இந்திய ரசாயனங்கள் மற்றும் பெட்ரொகெமிக்கல் துறையின் செயலாளர் ராகவேந்திர ராவ் செப்டம்பர் 11ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த சைட்லைன்ஸ் ஆஃப் இந்தியா கெம் 2018 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசுகையில், “பழைய பெட்ரொகெமிக்கல் துறைக்கான கொள்கையைப் புதுப்பிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகப் பங்குதாரர்களிடம் ஆலோசனை பெறப்பட்டு புதியக் கொள்கை வடிவமைக்கப்படும்.

பெட்ரோகெமிக்கல் மற்றும் ரசாயனங்கள் துறைக்கான ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்குவதுதான் எங்களுடைய தற்போதைய நோக்கம். தொழில் துறை மற்றும் உற்பத்தித் துறையிலிருந்து பெட்ரோகெமிக்கல் மற்றும் ரசாயனங்கள் துறைகளை தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க இயலாது. இத்துறைகளை மேம்படுத்தும் வகையில் கொள்கை மேம்படுத்தப்படும். உள்கட்டமைப்பு, முதலீடுகள் உள்ளிட்ட பலவற்றில் இத்துறைகளில் சிக்கல்களும், தேவைகளும் நிறைந்துள்ளன. பங்குதாரர்களிடம் ஆலோசனை பெற்று இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்போம்” என்றார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon