மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

கேரள அரசின் அவசர ஆணை செல்லாது!

கேரள அரசின் அவசர ஆணை செல்லாது!

கேரள மருத்துவக் கல்லூரிகளில் 2017ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, 180 எம்பிபிஎஸ் மாணவர்களின் சேர்க்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை புறந்தள்ளிவிட்டு கேரள அரசு பிறப்பித்த அவசர ஆணை செல்லாது என நேற்று (செப்டம்பர் 12) உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் கன்னூர் மருத்துவக் கல்லூரி மற்றும் கருணா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் முறைகேடுகள் மூலமாக மருத்துவ மாணவர்களைச் சேர்த்ததாகக் கூறி மொத்தம் 180 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, கேரள அரசு அதே ஆண்டு அக்டோபர் 20ல் கேரள தொழிற்கல்லூரிகள்( மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துதல்) குறித்த அவசர ஆணை ஒன்றை பிறப்பித்து, ரத்து செய்யப்பட்ட 180 மாணவர்களின் சேர்க்கையை முறைப்படுத்தி செல்லத்தக்கதாக மாற்றியது.

இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை புறந்தள்ளிவிட்டு கேரள அரசு பிறப்பித்த அவசர ஆணையை ரத்து செய்கிறோம். இந்த அவசர ஆணையின் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்ட 180 மாணவர்களும் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர முடியாது. எந்த பயனையும் அனுபவிக்க முடியாது” என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon