மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 31 மா 2020

ஈரோடு: மஞ்சள் விற்பனை மந்தம்!

ஈரோடு: மஞ்சள் விற்பனை மந்தம்!

ஈரோடு மஞ்சள் சந்தையில் இந்த வாரம் விற்பனை மந்தத்தைக் கண்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மஞ்சள் சந்தையாக ஈரோடு மஞ்சள் சந்தை உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் மஞ்சள் அதிகளவில் இந்த சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வர்த்தகர்கள் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு வந்து மஞ்சள் வாங்கிச் செல்கின்றனர்.

இந்த வாரத்துக்கான ஏலத்தில் உள்நாட்டு மற்றும் உள்ளூர் தேவைக் குறைவால் விலை சரிந்துள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் வழக்கம்போல தரமான, நடுத்தர மற்றும் தரம் குறைந்த என அனைத்து மஞ்சள் ரகங்களும் ஏலத்துக்கு வந்திருந்தன. அதில் விரலி மஞ்சளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 மட்டுமே கூடுதலாகக் கிடைத்துள்ளது. வேர் மஞ்சளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.250 மட்டுமே கூடுதலாகக் கிடைத்துள்ளது. வழக்கத்தைக் காட்டிலும் குறைவான அளவில் 1,100 பைகள் மட்டுமே ஏலத்திற்கு வந்திருந்த நிலையில் அதிலும் 60 விழுக்காடு மட்டுமே விற்பனையானது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon