மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஏப் 2020

தன்பாலின உறவு: தீர்ப்பு சரியானதாகத் தெரியவில்லை!

தன்பாலின உறவு: தீர்ப்பு சரியானதாகத் தெரியவில்லை!

தன்பாலின உறவு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சரியானதாகத் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377இன் படி, தன்பாலின உறவானது சட்ட விரோதம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்தது. இவ்வழக்கில் கடந்த 6ஆம் தேதி, ‘தன்பாலின உறவு குற்றமாகாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினரும் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நெல்லையில் இன்று (செப்டம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ”தீர்ப்புக்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. எந்தக் கட்சியும் இதில் சம்பந்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்திருப்பது சரியான ஒன்றாகத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தன்பாலின உறவு குறித்தான தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் மிகுந்த வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தீர்ப்பு குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon