மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

தமிழில் அறிமுகமாகும் கன்னட ஸ்டார்!

தமிழில் அறிமுகமாகும் கன்னட ஸ்டார்!

கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் ‘பப்பி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்டி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததுடன் அவரின் நடிப்பும் பெரியளவில் பேசப்பட்டது. தொடர்ந்து கன்னடத்தில் நடித்த அவர் கிரிக் பார்டி படத்தின் ரீமேக் மூலம் தெலுங்கில் களம் கண்டார். தற்போது அறிமுக இயக்குநர் நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ என்ற படத்தின் மூலம் அவர் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்துவைத்துள்ளார்.

நட்டு தேவ் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தை இயக்கிய மணிகண்டனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தமிழில் நடிக்கப் பல கதைகள் வந்த போதும் தவிர்த்து வந்த அவர் நட்டு தேவ்வின் திரைக்கதை பிடித்துப்போக உடனே சம்மதித்துள்ளார். படத்தின் தலைப்பிற்கேற்றவாறு ஒரு நாயை மையமாக வைத்துக் கதை பயணிக்கிறது. படத்தின் ஆரம்பக் கட்டப்பணிகள் நடைபெற்றபோதே திரைக்கதை குறித்து இயக்குநர் குழு சம்யுக்தாவிடம் விளக்கியதால் வசனங்களை ‘ப்ராம்ட்’ செய்யாமல் பேசிவருகிறார்.

படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவரும் இப்படத்தில் வருண் சம்யுக்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் போகன், நெருப்புடா ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon