மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

நீலகிரியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை!

நீலகிரியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை!

நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் 100 சதவிகிதம் இல்லை என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தடுக்க கேரள, கர்நாடக மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு, நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நெடுகல்கம்பை கிராமத்துக்குள் நுழைந்த மாவோயிஸ்டுகள்சிலர், அங்கு பல மணி நேரம் தங்கியிருந்து, அதன்பின் வனப்பகுதிக்குள் சென்று மறைந்ததாகக் கூறப்பட்டது.

இதனால், நீலகிரி எல்லைகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதாகக் கூறி, குறிப்பிட்ட கிராமங்களில் அதிரடிப்படை போலீசார் முகாம் அமைத்தனர். அப்பகுதிகளில், 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் அதிரடிப்படை போலீசார் உஷார்படுத்தப்பட்டு,வனப்பகுதியில் அவ்வப்போது தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, சந்தேகத்துக்குரியநபர்களின் நடமாட்டமும் கண்காணிக்கப்படுகிறது.

போலீசாரின் கண்காணிப்பு தொடர்ந்துவரும் நிலையில், நீலகிரியில் 100 சதவிகிதம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா.

"இருப்பினும், மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கண்காணிக்க 3 என்.எஸ்.டி. குழுக்கள் மற்றும் எஸ்.டி.எப். படையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக - கேரள எல்லைப்பகுதியில் போலீசார் தினமும் வாகனச் சோதனை மற்றும் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள பழங்குடியின மக்களிடம், சந்தேகப்படும்படி புதிய நபர்கள் யாரவது தென்பட்டால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு போலீசார் கூறி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon