மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

மோதலுக்குத் தயாராகும் வெங்கட் பிரபு அசிஸ்டன்ட்ஸ்!

மோதலுக்குத் தயாராகும் வெங்கட் பிரபு அசிஸ்டன்ட்ஸ்!

ஜெய் நடிப்பில் உருவாகிவரும் ஜருகண்டி படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 வாயிலாக கவனம்பெற்ற நடிகர்களான ஜெய்யும் நிதின் சத்யாவும் மீண்டும் இணைந்துள்ள படம் ஜருகண்டி. ஆனால் நிதின் சத்யா இந்தமுறை இணைந்திருப்பது தயாரிப்பாளராக. அந்தவகையில் நிதின் சத்யாவின் ஷ்வேத் க்ரூப்பும் பத்ரி கஸ்தூரியின் ஷ்ரத்தா எண்டெர்டைன்மெண்டும் இணைந்து இதைத் தயாரிக்கின்றனர்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த ஏ.என்.பிச்சுமணி இதை இயக்குகிறார். போபோ ஷாஷி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் வாயிலாக மலையாள நடிகை ரேபா மோனிகா ஜான் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். மேலும் அமித் குமார் திவாரி, ரோபோ சங்கர், டேனியல் உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர். காமெடி எண்டெர்டெய்னர் வகை திரைப்படம் என அறியப்படும் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது. அதே நாளில்தான் பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகும் பரியேறும் பெருமாள் படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. பா.இரஞ்சித் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon