மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையிலேயே மக்கள் கொழுக்கட்டை படையலிட்டு வழிபட்டனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள முக்குருணி விநாயகர், ஆசியாவிலேயே உயரமான சிலை அமைந்துள்ள, ஒரே கல்லால் செய்யப்பட்ட கோவை புளியகுளம் முக்தி விநாயகர் கோயில், திண்டுக்கல் மாநகரின் மையப்பகுதியான கோபாலசமுத்திரக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு நன்மை தரும் 108 விநாயகர் கோயில் உட்படப் பல கோயில்களில் இன்று அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விநாயகர் சதுர்த்திக்காக ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடியில் விநாயகர் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து, பசுமையை வலியுறுத்தும் வகையில் இந்த விநாயகர் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பத்துக்குக் கீழே பசுமையைக் காப்போம், பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்போம் என்று எழுதப்பட்டுள்ளது.

திருச்சி மலைக்கோட்டையின் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் கோயிலில் 150 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. சதுர்த்தியை முன்னிட்டு மும்பையின் கிழக்குப் பகுதியில் 70 கிலோ தங்க விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. தங்க விநாயகரைப் பாதுகாக்க, கண்காணிப்பு பணிக்காக ஆளில்லா விமானங்கள் பயன்டுத்தப்பட்டுள்ளது.

சேலத்தில் செவ்வாய்பேட்டை பகுதியில், 7D தொழில்நுட்பத்தில் 10 அடி உயரமுள்ள அருகம்புல்லால் ஆன விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon