மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

12 வேலையாட்களுடன் படிக்கச் செல்லும் பெண்!

12 வேலையாட்களுடன் படிக்கச் செல்லும் பெண்!

ஆண்டுக்குத் தலா ரூ.28 லட்சம் சம்பளத்தில் 12 பணிப் பெண்களை நியமித்து, லண்டனுக்கு மகளை படிக்க அனுப்புகிறார் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர்.

இதுகுறித்து தி சன் எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரின் மகள், தனது மேற்படிப்புக்காக ஸ்காட்லாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். பல மைல் தொலைவில் இருந்தாலும் தன்னுடைய மகள் வீட்டில் இருப்பதைப் போன்று உணர வேண்டும் என்பதற்காகவும், அங்குள்ள சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்காகவும், அவருக்கு உதவியாக 12 ஊழியர்கள் வேண்டும் எனவும் அவர் விளம்பரம் அளித்திருந்தார். அதில், விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஆண்டு சம்பளம் 30 ஆயிரம் பவுண்டுகள் என்று கூறப்பட்டிருந்தது. இதன் மதிப்பு, இந்திய ரூபாயில் 28.5 லட்சமாகும்.

ஒரு சமையல்காரர், பணிப்பெண், உணவு பரிமாறுபவர், ஓட்டுநர், தோட்டக்காரர், மேலாளர், மூன்று காவலாளிகள் மற்றும் மூன்று பணியாட்கள் என 12 ஊழியர்கள் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கென்று ஸ்காட்லாந்தில் ஒரு மாளிகை வாங்கியுள்ளார் அந்தப் பெண்ணின் தந்தை. பல்கலைக்கழகத்திலும் மாளிகையிலும் சவுகர்யமாக இருக்கும் வகையில், இந்த ஊழியர்கள் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon