மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 17 நவ 2019

அயனாவரம் சிறுமி: குற்றப்பத்திரிகை தாக்கல்!

அயனாவரம் சிறுமி: குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட 17 பேர் மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுதொடர்பாக, அந்தக் குடியிருப்பில் பணிபுரிந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், காவல் துறை நடத்திய அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட சிறுமியால் அடையாளம் காணப்பட்டனர். இவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கடந்த 6ஆம் தேதியன்று, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதாக உத்தரவிட்டார் சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன். இதனால், இவர்கள் அனைவரும் ஓராண்டுக்கு ஜாமீன் பெறமுடியாத நிலை உருவானது.

இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 12) சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, கைதான 17 பேர் மீது 300 பக்கக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர் போலீஸார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon