மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 17 நவ 2019

ஏற்றம் கண்ட ஏற்றுமதி!

ஏற்றம் கண்ட ஏற்றுமதி!

ஆகஸ்ட் மாதத்தில் இந்திய ஏற்றுமதி 19.21 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பதிவில், “ஆகஸ்ட் மாதத்தில் இந்திய ஏற்றுமதித் துறை வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 27.84 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 19.21 விழுக்காடு அதிகமாகும். இதில் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

ஆனால், வழக்கம்போல ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதியே ஆகஸ்ட் மாதத்திலும் அதிகமாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 45.24 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25.41 விழுக்காடு அதிகமாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் இறக்குமதி மதிப்பு உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரையில் வர்த்தகப் பற்றாக்குறை 17.04 பில்லியன் டாலராக உள்ளது.

இருப்பினும் ஜூலை மாதத்தைக் காட்டிலும் வர்த்தகப் பற்றாக்குறை சற்று குறைந்துள்ளது. ஜூலையில் வர்த்தகப் பற்றாக்குறை 18.02 பில்லியன் டாலராக இருந்தது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் ஏற்றுமதி 16.13 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயத்தில் இறக்குமதி 17.34 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon