மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

‘பேட்ட’ இசை உருவான விதம்!

‘பேட்ட’ இசை உருவான விதம்!

ரஜினியின் ‘பேட்ட’ மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள இசையை ரெக்கார்ட் செய்தபோது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார் அனிருத்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிவரும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, திரு ஒளிப்பதிவு செய்கிறார். டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

சிம்ரன், த்ரிஷா, நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் ஆகியோர் ‘பேட்ட’ படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னாள் ராணுவ வீரராக இருந்து, தற்போது ஹாஸ்டல் வார்டனாக ரஜினி நடிக்கிறார்.

‘பேட்ட’ படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் என்பதால், இந்தப் படத்தின் இசைக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் அனிருத்தின் பின்னணி இசையும் இடம் பெற்றிருந்தது. இதை ரசிகர்கள் வரவேற்றபோதும், சிலர் இது ஹாலிவுட்டில் வெளியான பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தின் இசையின் சாயலில் உள்ளதாக குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.

இந்த நிலையில், மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள இசை உருவான விதத்தை வீடியோவாகவெளியிட்டுள்ளார் அனிருத். சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில், இசைக் கலைஞர்கள் சாக்ஸபோன் இசைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon