மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 செப் 2019

சில்லறைப் பணவீக்கம் குறைவு!

சில்லறைப் பணவீக்கம் குறைவு!

கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சில்லறை பணவீக்கம் 3.69 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசு அறிக்கையில், “நுகர்வோர் விலை குறியீட்டின் (சிபிஐ) அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்துக்கான சில்லறைப் பணவீக்கம் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.69 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.17 விழுக்காடாக இருந்தது” என்று கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 விழுக்காட்டைக் கடந்த 10 மாதங்களில் இப்போதுதான் முதன்முறையாக சில்லறைப் பணவீக்கம் அடைந்துள்ளது. இதற்கு முன்பு சில்லறைப் பணவீக்கம் கடந்த ஆண்டு அக்டோபரில் 3.58 விழுக்காடாக இருந்தது.

இதனால் தற்போது உணவுப் பொருட்கள் விலை வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது. ராய்டர்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஆகஸ்ட் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.68 விழுக்காடாக இருந்தது என்று மதிப்பிட்டுள்ளது. ஜூலை மாதத்தில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) 6.6 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இது ஜூன் 7 விழுக்காடாக இருந்த நிலையில் ஜூலையில் பின்னடைவைக் கண்டுள்ளது. அதேநேரத்தில் இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலை இதுவரையில் 15 விழுக்காடு அளவுக்கு உயர்வு கண்டுள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.86 ரூபாயாகச் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon