மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

அதிகரிக்கும் அரை பில்லியனர்கள்!

அதிகரிக்கும் அரை பில்லியனர்கள்!

இந்தியாவில் அரை பில்லியனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

இதுகுறித்து நைட் ஃபிரேங் ஆய்வில், ‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அரை பில்லியனர்களின் (50 கோடி டாலர் அல்லது அதற்கு மேல் சொத்து மதிப்புடையவர்கள்) எண்ணிக்கை 340 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் அரை பில்லியனர்களின் எண்ணிக்கை 200 ஆக மட்டுமே உள்ளது.

2017ஆம் ஆண்டு கணக்குப்படி ஃபிரான்சில் 230 அரை பில்லியனர்களும், இங்கிலாந்தில் 220 அரை பில்லியனர்களும் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் ஃபிரான்சில் 310 ஆகவும், இங்கிலாந்தில் 260 ஆகவும் அதிகரிக்கும். எனவே 2022ஆம் ஆண்டில் இந்த இரு நாடுகளைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் அரை பில்லியனர்கள் இந்தியாவில் இருப்பார்கள்.

தற்போது அதிக அரை பில்லியனர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. 2017ஆம் ஆண்டு கணக்குப்படி அமெரிக்காவில் 1,830 அரை பில்லியனர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 2,500 ஆக அதிகரிக்கும். சீனாவில் தற்போது 490 அரை பில்லியனர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 990 ஆக அதிகரிக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் வடஅமெரிக்காவைப் பின்னுக்குத்தள்ளி அதிக அரை பில்லியனர்கள் அதிகம் வாழும் கண்டமாக ஆசியா உருவெடுக்கும் என்றும் இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் ஆசியாவில் மட்டும் சுமார் 3,000 அரை பில்லியனர்கள் இருப்பார்கள் என்பது இந்த ஆய்வறிக்கையின் மதிப்பீடு.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon