மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

சன் டிவிக்கு வந்த சார்லி சாப்ளின்!

சன் டிவிக்கு வந்த சார்லி சாப்ளின்!

நடிகர் பிரபுதேவா நடிக்கும் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு மற்றும் பிரபுதேவா ஆகியோர் இணைந்து 2002இல் நடித்திருந்த படம் சார்லி சாப்ளின். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படம் அதிகாரபூர்வமாக அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் எனவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் அடுத்த பாகமாக சார்லி சாப்ளின்-2 எனும் படம் தற்போது உருவாகி வருகிறது. சக்தி சிதம்பரம் இயக்கும் இதில் பிரபுதேவாவுடன் நிக்கி கல்ராணி, அடா ஷர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் இதைத் தயாரிக்கிறது. அம்ரிஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கிரேஸி மோகன் இதற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

நாளை (செப்டம்பர் 14) இதன் சிங்கிள் ட்ராக் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சாட்டிலைட் ரைட்ஸ் மட்டுமல்லாது இதில் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸும்கூட அடங்கும். இந்த சாட்டிலைட் உரிமை சுமார் ரூ. 2.75 கோடி மதிப்பிலானது என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon