மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

சீமராஜா சாதிக்குமா, சறுக்குமா?

சீமராஜா சாதிக்குமா, சறுக்குமா?

சிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் - ஓர் அலசல் - 7

சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து நடிக்கும் முதல் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் - சிவா இணையும் மூன்றாவது படம். சிம்ரன் - சிவா இணைந்து நடித்துள்ள முதல் படம். சீமராஜா திரைப்படத்துக்கான விளம்பரங்கள் அனைத்தும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை ஞாபகப்படுத்துவதாகவே இருக்கிறது என்கிறது ரசிகர் வட்டாரம்.

போட்டிக்கு இந்தப் படத்தின் கதாநாயகி சமந்தா நடித்துள்ள யு டர்ன் படம் மட்டுமே இன்று வெளியாகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் இக்கட்டுரை எழுதப்படும் நேரம் வரை ஓப்பனிங் இல்லாதது கண்டு தியேட்டர் வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளது. முன்னணி நடிகர்கள் படங்களுக்கு முதல் நாள் சாதாரணமாக டிக்கெட் கிடைக்காது ரசிகர்கள் அலை மோதுவார்கள்.

சீமராஜா படத்திற்கு ஆன்லைன் புக்கிங்கில் தாராளமாகவே டிக்கெட் கிடைக்கிறது. சிவகார்த்திகேயனை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் மன்ற அடிப்படை கட்டமைப்புகள் இல்லை என்பதைக் காட்டிலும் உருவாக்கப்படவே இல்லை. அதனாலேயே படத்திற்கு ஓப்பனிங் குறைவாக இருக்கிறது என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம்.

“படம் நன்றாக இருக்கிறது என்ற தகவல் கசியும் வரை தான் இந்தத் தடுமாற்றம் இருக்கும் அதன்பின் வெகுஜன பார்வையாளர்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு படையெடுப்பார்கள். அப்படித்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வெற்றி பெற்றது” என்கிறார் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன். இதுவரை இந்தத் தொடரில் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஏரியா வியாபார விவரங்களை எழுதியிருந்தோம்.

எஞ்சிய சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்னாற்காடு பகுதிகளில் பிரதானமானது செங்கல்பட்டு. கோவை ஏரியாவுக்கு இணையாக இப்பகுதியின் விலை சுமார் ரூ.6 கோடி வரை வியாபாரமாகியுள்ளது. வட - தென்னாற்காடு பகுதி ரூ.3.50 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. வேலைக்காரன் படத்தின் விநியோக உரிமையை வாங்கியவர்களிடமே சீமராஜா படத்தின் உரிமை வழங்கப்பட்டுள்ளது

வேலைக்காரன் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் இந்தப் படத்தின் வியாபாரத்தில் சரி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 35 கோடி வரை தமிழ்நாடு விநியோகஸ்தர்களிடம் இருந்து தயாரிப்பு தரப்பில் பணம் பெறப்பட்டுள்ளது. இது அவுட்ரேட் அல்லது எம்.ஜி, விநியோக உரிமை என்பது பற்றி தயாரிப்பு நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

விநியோகஸ்தர்கள் மூலம் பெறப்பட்ட தொகை, பட வெளியீட்டுச் செலவு அனைத்தும் சேர்ந்து 40 கோடி முதலீடு தமிழகத்தில் டிக்கெட் விற்பனை மூலம் 52 கோடி வசூலானால் அசல் கிடைக்கும்.

தமிழ் சினிமா ரசிகன் என்ன தரப்போகிறான் என்பது மாலைக்குள் தெரிந்து விடும்.

சிவகார்த்தி மார்கெட்: கள நிலவரம் என்ன?

மதுரையில் பறக்குமா சீமராஜா கொடி?

நெல்லையில் நிலைகொள்ளுமா சீமராஜா?

திருச்சி திருப்பத்தை தருமா?

சேலத்தில் சிவகார்த்தியின் நிலை என்ன?

கோவையில் தாக்குபிடிக்குமா சீமராஜா?

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon