மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

பாலில் கால்சியம் எப்படி வந்தது..?

ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா, காம்ப்ளான்னு ஏதாவது ஓர் ஊட்டச்சத்து உணவை நீங்க கண்டிப்பா சாப்பிட்டிருப்பீங்க. அவை உங்க உடலுக்குத் தேவையான சத்துகள் அடங்கியவைனு விளம்பரப்படுத்தப்படுது. சரி, அப்படியே இருக்கட்டும். அந்தச் சத்துகள் உங்க உடல்ல சேருமா? அந்தச் சத்துகள் உங்களுக்கு தேவைதானா? அவற்றால் நமக்கு நன்மையா, தீமையா..?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்பதற்கு முன்னாடி, உடல் குறித்த ஒரு முக்கியமான அறிவியலைப் புரிஞ்சுக்க வேண்டியது முக்கியம்.

உங்ககிட்ட ஒரு சாதாரண கேள்வி குட்டீஸ்…

புல்லில் என்ன வகையான சத்துகள் இருக்கும்?

மெக்னீசியம், ஸ்டார்ச்.

சரி, மாட்டுப் பாலில் அதிகமாக உள்ள சத்து எது?

கால்சியம்.

நல்லது. மெக்னீசியம் சத்துள்ள புல்லைச் சாப்பிடும் மாட்டின் பாலில் மெக்னீசியம்தானே இருக்கணும்? கால்சியம் எப்படி வந்துச்சு?

இன்னொரு கேள்வி.

எலும்பு வளர என்ன சத்து தேவை?

கால்சியம்.

சரி, முட்டைல என்ன சத்து இருக்கிறது..?

புரோட்டீன், கொழுப்பு.

அப்போ முட்டையிலிருந்து வெளிவரும் கோழிக்குஞ்சோட உடலில் இருக்கும் எலும்புகளுக்கான கால்சியம் எங்கிருந்து வந்துச்சு?

இந்தக் கேள்விகளை மட்டும் ஆழமா புரிஞ்சுக்கோங்க. பதிலைப் பத்தி கவலைப்படாதீங்க. பதில் ரொம்ப எளிமையானது. அதை நாளைக்கு சொல்றேன்.

- நரேஷ்

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon