மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சென்னை: கட்டுமானப் பணிக்கு எவ்வளவு செலவாகும்?

சென்னை: கட்டுமானப் பணிக்கு எவ்வளவு செலவாகும்?

இந்தியாவின் முன்னணி நகரங்களில் கட்டுமானப் பணிக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை சொத்து ஆலோசனை நிறுவனம் மதிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சொத்து ஆலோசனை நிறுவனமான சி.பி.ஆர்.இ. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘மும்பை, டெல்லி, புனே, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இந்தியாவின் முன்னணி 6 நகரங்களில் மும்பையில்தான் கட்டுமானப் பணிக்கு அதிகமாகச் செலவாகிறது. மும்பையில் கட்டுமானப் பணிக்கு ஒரு சதுர அடிக்குத் தோராயமாக ரூ.3,125 செலவாகிறது. மும்பை நகரின் அதிகரித்து வரும் பல்வேறு வகையான தேவைகள், லாஜிஸ்டிக் நெட்வொர்க்குகள் போன்றவையே இதற்குக் காரணமாக உள்ளது.

இரண்டாவது இடத்தில் டெல்லியும், புனேவும் உள்ளன. இந்த இரு நகரங்களிலும் கட்டுமானப் பணிகளுக்கு சதுர அடி ஒன்றுக்கு தோராயமாக ரூ.2,750 செலவாகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் சதுர அடி ஒன்றுக்கு தோராயமாக ரூ.2,500 செலவாகிறது. ஹைதராபாத்தில் சதுர அடி ஒன்றுக்கு தோராயமாக ரூ.2,375 செலவாகிறது. பொறியியல் செலவுகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நகருக்கும் இடையில் இணக்கமான வேறுபாடு நிலவுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டிக்குப் பிறகு கட்டுமானத் துறை நிலையாகியுள்ளது என்றும், 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 8.2 பில்லியன் சதுர அடியிலான கட்டுமானப் பணிகள் நடைபெறும் எனவும் இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இதன்மூலம் 1.7 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் சி.பி.ஆர்.இ. கணித்துள்ளது.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon