மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

சென்னையில் அரசு மருத்துவர்கள் பேரணி!

சென்னையில் அரசு மருத்துவர்கள் பேரணி!

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தைத் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (செப்டம்பர் 12) சென்னையில் அரசு மருத்துவர்கள் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் சென்னையில் அரசு மருத்துவர்கள் பங்கேற்ற பேரணி நேற்று நடைபெற்றது. சென்னை அண்ணா சிலையில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி நடைபெற்ற இந்தப் பேரணியில் 2,000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் அருகே சென்றபோது, போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், சலுகைகள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon