மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

ஷாருக் இடத்தைப் பிடித்த ரன்பிர் கபூர்

ஷாருக் இடத்தைப் பிடித்த ரன்பிர் கபூர்

இயக்குநர் கரன் ஜோஹர், ஷா ருக் கான் குறித்த சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர், தயாரிப்பாளர், டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என படு பிஸியாக வலம்வருபவர் இந்தி திரைப் பிரபலம் கரன் ஜோஹர். தான் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரன்’ புதிய சீஸன் அக்டோபரில் தொடங்கவிருப்பதால் தற்போது ரொம்பவே பிஸியாக உள்ளார். இந்த நிலையில் தான் இயக்கிய ‘குச் குத் ஹோதா ஹை’ படம் குறித்த சுவாரஸ்யமான பதிலை வெளியிட்டுள்ளார் கரன்.

காலிங் கரன் எனும் ரேடியோ நிகழ்ச்சியொன்றில் சமீபத்தில் கலந்துகொண்ட அவர், தான் இயக்கிய ‘குச் குச் ஹோதா ஹை’ படத்தை இப்போது இயக்கினால் ரன்பிர் கபூர், ஆலியா பட் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரை வைத்து படமாக்குவேன் எனக் கூறியுள்ளார். கரனின் இந்தப் பதில் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுவருகிறது.1998ஆம் ஆண்டு கரன் ஜோஹர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் ஷா ருக் கான், கஜோல், ராணி முகர்ஜி உள்ளிட்டோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து 2017இல் பிடிஐ செய்தியில் கரன் ஜோஹர் கூறியபோது, “இந்தப் படக்கதையை எழுதும்போது எனக்கு வயது 24. அந்தக்கதையை இப்போது என்னால் எழுத முடியாது. நான் இயக்கிய குச் குச் ஹோதா ஹை மற்றும் கபி குஷி கபி கம் படங்களைப் பார்க்கும்போது ஏன் இந்த மாதிரி எழுதினேன், எப்படி இதை எழுதினேன், இந்தக் கதை எப்படி எனக்கு உதித்தது என எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது" எனக் கூறியிருந்தார்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது