மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

அக்கரைப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!

 அக்கரைப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!

விளம்பரம்

அக்கரைப்பட்டி சாயிபாபா மந்திர் என்பது சமயங்களைக் கடந்த ஒரு சமாதானத்தலம். சீரடியில் மசூதியையே தன் மனம் கவர்ந்த இடமாகக் கொண்டவர் சாய்பாபா. அவருக்கு இன்ன மதம், இன்ன இனம் என்று பாராமல் உலகின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் இருக்கிறார்கள்.

அக்கரைப்பட்டி என்ற ஆன்மிக பூமியிலே சாய்பாபா கோயில் அமைந்ததில் இருந்தே இங்கே பல அரிய நிகழ்வுகள் ஸ்ரீசாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட்டால் நடத்தப்பட்டு வருகின்றன. பல மக்கள் நலத் திட்டங்களும், பல உற்சவங்களும் பாண்டுரங்க பக்த வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கணபதி என்றும் கணேசன் என்றும் அழைக்கப்படும் விநாயகரின் சதுர்த்தி விழாவும் அக்கரைப்பட்டியில் கோலாகலமாய் கொழுக்கட்டைகளோடு கொண்டாடப்படுகிறது. அக்கரைப்பட்டி சாய்பாபா வளாகத்திலேயே விநாயகர் சிலையும் இருக்கிறது. இங்கேதான் விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பலர் பலவிதமாய் கருத்து தெரிவிக்கிறார்கள். பலர் இதை பக்தி பூர்வமாக அணுகுகிறார்கள். சிலர் இதை பக்தியைத் தாண்டிய விதமாக அணுகுகிறார்கள். இந்த நிலையில் சாய்பாபாவின் சமயம் கடந்த ஒரு நிலையை நாம் நினைவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இதழ் ஒன்றில் வெளிவந்த இந்த சாயி சரித்திர சம்பவத்தை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

“சாய்பாபா தினமும் தண்ணீர் ஊற்றி பூஞ்செடிகள் வளர்த்த லென்டித்தோட்டத்தில் அதிக அளவில் துளசியைத்தான் வளர்த்தார். அந்த தோட்டத்து துளசியை பறித்து வந்து அவர் ஆண்டுதோறும் ராமநவமியையும் விமரிசையாகக் கொண்டாடினார். சீரடியில் முஸ்லிம்கள் தங்குவதற்காக தாகியா என்று அழைக்கப்பட்ட விடுதி ஒன்று இருந்தது. சில நாள் இரவு சாய்பாபா அந்த விடுதிக்கு செல்வார்.

அங்கிருக்கும் இஸ்லாமிய தலைவர்களுடன் அன்போடு பேசுவார். பிறகு தன் கால்களில் சலங்கை கட்டிக் கொண்டு பாடி நடனமாடுவார். அவர் பாடும் பாடல்கள் பாரசீகம் அல்லது அரேபிய மொழியில் இருக்கும். மறுநாள் மசூதியில் இருக்கும் போது ஹரியின் கீர்த்தனைகளை பாடும்படி கூறுவார். ஹரியின் புகழை 7 நாட்கள் தொடர்ந்து பஜனையாகவும் அவர் அடிக்கடி நடத்துவதுண்டு. ஹரியின் நாம சங்கீர்த்தனை மூலம் இறைவனை எளிதாக அடையலாம் என்று பாபா அடிக்கடி கூறுவதுண்டு.

ஆக, சாய்பாபா எந்த மதச் சாயமும் இல்லாமல், எல்லாம் கலந்த கலவையாக இருந்தார் என்பது உறுதியாகிறது. என்றாலும் பாபாவை பார்க்க வரும் முஸ்லிம்கள் அங்கு ஃபாத்தியா ஓதுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அவர்கள் பாபா முன்பு தொழுகை நடத்தி முடிந்ததும் தேங்காய் உடைத்து, சர்க்கரைக் கட்டிகளை சேர்த்து பிரசாதமாக கொடுப்பார்கள். பாபா மறுக்காமல் வாங்கிச் சாப்பிடுவார்.

அடுத்த சில நிமிடங்களில் இந்துக்கள் வந்து அவருக்கு மாலை அணிவித்து, சந்தனம் பூசி, குங்குமம் வைத்து, பாத பூஜை செய்து நைவேத்தியம் படைத்து, மணி அடித்து, தீபாராதனை காட்டி வழிபடுவார்கள். அதாவது ஆலயத்தில் மூலவருக்கு எப்படி பூஜை நடத்தப்படுமோ, அப்படியே செய்வார்கள். அதையும் பாபா தடுக்கவில்லை. புன்முறுவலோடு ஏற்றுக் கொண்டார்.

இந்துக்களும், முஸ்லிம்களும் இப்படி போட்டி போட்டுக்கொண்டு பாபாவுக்கு உரிமை கொண்டாடினார்கள். ஒரு கட்டத்தில் அது மோதலாக மாறியது. ஒரு முறை பாபாவைத் தரிசிக்க வந்த முஸ்லிம்கள் நமாஸ் செய்ய விரும்பினார்கள். ஆனால் அங்கிருந்த இந்துக்கள் பாபா முன் தாங்களே முதலில் கீர்த்தனைகளை பாடி வழிபட விரும்பினார்கள்.

அவர்கள் வாக்குவாதம் செய்வதை கண்ட பாபா, ‘ராமரும் ரகீமும் ஒன்று தான். அதை முதலில் உணருங்கள். பிறகு யோகம், தியானம், தவம், ஞானம் மூலம் கடவுளை அறிந்து கொள்ள முயலுங்கள். இப்படி சண்டை போடாதீர்கள். மதத்தை முன்னிலைப்படுத்தி உங்களுக்குள் சண்டையிட்டால், நீங்கள் இந்த பிறவி எடுத்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்’ என்றார்”

-இதுதான் சாயி சரித்திரத்தின் முக்கியமான அந்தப் பகுதி.

சாய்பாபாவை பின்பற்றுவோம், சமாதானமாய் வாழ்வோம்

(பாபா பரவசம் தொடரும்)

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
[email protected]
http://akkaraipattisaibaba.com/

விளம்பர பகுதி

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon