மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

யோகி ஆதித்யநாத் மீது வழக்கு?

யோகி ஆதித்யநாத் மீது வழக்கு?

கோரக்பூரில் 2007இல் நடைபெற்ற மதக்கலவரத்தை தூண்டி விட்டதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மாவட்டத்தின் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

2007 ஜனவரியில் சாத்வி மொகரம் பண்டிகையின்போது ஆதித்யா இந்துத்துவ அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார். இதனைத்தொடர்ந்து இந்து வாஹினி என்ற இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இமாம் சௌக் என்ற இடத்தில் கூடினர். பின்னர் அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக கோஷமிட்டனர். முஸ்லீம்களின் சொத்துக்களுக்கும் மத நூல்களுக்கும் தீ வைத்தனர். இந்த சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட யோகி மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இதனடிப்படையில் குற்றப்பத்திரிகையானது 2007 ஜீன் 27ம்தேதியன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை மாஜிஸ்திரேட்டால் குற்றப்பத்திரிகையானது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவு பிறப்பித்தது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்ற அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை மறுபரிசீலனை செய்த குற்றவியல் அமர்வு நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. பின்னர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து முறையீடு வழக்காக சிறப்பு மனு ஒன்று ரஷீத் கான் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஏஎம்.கான்வில்கா் மற்றும் டிஒய்.சந்திரசௌத் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது யோகி ஆதித்யநாத் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மாவட்டத்தின் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது .

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon