மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

நோட்டாவை ‘டிக்’ செய்த ஏ.ஆர்.முருகதாஸ்

நோட்டாவை  ‘டிக்’ செய்த ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘நோட்டா’வில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் இணைந்துள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி மற்றும் விக்ரம் நடித்த இருமுகன் போன்ற படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர். விஜய் தேவரகொண்டாவை கதாநாயகனாக வைத்து நோட்டா எனும் படத்தை தற்போது இயக்கிவருகிறார்.

சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மெம்ஹ்ரீன் பிர்ஸதா, சத்யராஜ், நாசர், சஞ்சனா நடராஜன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸும் இணைந்து நடித்துள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் ஷங்கர், தனது இயக்குநரை இயக்குநராக இருந்து இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் நடிப்பார் எனத் தெரிகிறது. ஆனந்த் ஷங்கர் முன்னதாக ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon