மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

இந்தியா: வடகொரியா அல்ல!

இந்தியா: வடகொரியா அல்ல!

"வடகொரியா போன்று ஒரே ஆட்சியை 50 ஆண்டு காலத்திற்கு ஏற்க இந்தியா ஒன்றும் சர்வாதிகார நாடு இல்லை" என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, “வரும் 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். அடுத்த 50 ஆண்டிற்கு பாஜகவின் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. ஏனெனில் எங்கள் ஆட்சி செய்துவரும் நலப்பணிகளுக்காக மக்கள் அளிக்கும் பரிசாக வரவிருக்கும் தேர்தல் வெற்றியினை கருதுகிறோம். இதை நாங்கள் வெறும் பெருமைக்காக சொல்லவில்லை” என்றார்.

இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, "ஜனநாயகம் அற்ற முறையில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய நினைக்கும் பாஜக-விற்கு செல்லிக்கொள்வது என்னவென்றால், வடகொரியா போன்று ஒரே ஆட்சியை 50 ஆண்டு காலத்திற்கு ஏற்க இந்தியா ஒன்றும் சர்வாதிகார நாடு இல்லை. வடகொரியாவை போல் இந்தியாவை சர்வாதிகார ஆட்சிக்குள் கொண்டுவர நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது. இந்திய குடிமக்கள் விழிப்புணர்வுள்ளவர்கள். விரைவில் இந்திய மக்கள் பாஜக ஆட்சியை தூக்கி எறிவார்கள். எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon