மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

ஒன் ப்ளஸ் உத்தியை பின்பற்றும் சியோமி!

ஒன் ப்ளஸ் உத்தியை பின்பற்றும் சியோமி!

சியோமியின் துணை நிறுவனமான ஹுவாமி, இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆளும் சீன நிறுவனமான சியோமி, ஹுவாமி என்ற பெயரில் சமீபத்தில் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர் கருவிகளை அறிமுகம் செய்திருந்தது. தற்போது அந்த ஸ்மார்ட்வாட்சின் வெளியீடு குறித்த டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 17 முதல் ஹுவாமி ஸ்மார்ட்வாட்ச்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சுக்கு Amazfit Pace என்றும், ஃபிட்னஸ் டிராக்கருக்கு Amazfit Cor என்றும் பெயரிடப்பட்டுள்ளன.

டீசரில் கிடைத்துள்ள தகவலின்படி ஹுவாமி நிறுவனம், மார்வல் நிறுவனத்திடம் கைகோர்த்து அவஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் என்ற ஸ்பெஷல் எடிசன் ஸ்மார்ட் வாட்ச்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. முன்னதாக மற்றொரு சீன நிறுவனமான ஒன் ப்ளஸ் நிறுவனமும் இதே உத்தியைக் பயன்படுத்தியிருந்தது. ஒன் ப்ளஸ்-6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டின் போது வியாபாரத்திற்காக இன்ஃபினிட்டி வார் ஸ்பெஷல் எடிசன் போன்கள் வெளியாகியிருந்தன.

GPS, இதயத் துடிப்பு சென்சார்கள், 2.4GB மெமரி, மியூசிக் ப்ளேயர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட Amazfit Pace ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் ரூ.9,999க்கு விற்பனைக்கு வருகிறது. Amazfit Cor ஃபிட்னஸ் டிராக்கரின் விலை ரூ.3,999 ஆகும். இந்தக் கருவிகளுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் அதன் பேட்டரித் திறன் 11 நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon