மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 22 நவ 2019

மனித உரிமைப்போராளிகளின் வீட்டுக்காவல் நீட்டிப்பு!

மனித உரிமைப்போராளிகளின் வீட்டுக்காவல் நீட்டிப்பு!

பீமா கோரகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்களின் காவலானது வரும் 17ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கைது செய்யப்பட்ட கவிஞர் வரவரா ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், உள்ளி்ட்ட 5 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வரலாற்று நிபுணர் ரொமிலா தாப்பார் உள்ளிட்ட புகழ்பெற்ற அறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கை தொடர்ந்தனர். .இதனைத்தொடர்ந்து அவர்களை இன்று (செப்-12) வரை வீட்டுகாவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. இன்றோடு வீட்டுக்காவலின் காலம் முடிவடைகிறது.

இந்நிலையில்,இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஏஎம் கான்வில்கர் மற்றும் டிஒய்.சந்திரசௌத் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அது வரை அவர்களின் வீட்டுக் காவலை வரும் 17ம்தேதி வரை நீட்டிக்க உத்தரவிட்டது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon