மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சினிமாவையும் விட்டு வைக்காத ஆப்பிள்!

சினிமாவையும் விட்டு வைக்காத ஆப்பிள்!

தொழில்நுட்பத் துறையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஆப்பிள் நிறுவனம் தற்போது டிவி மற்றும் சினிமா துறையிலும் தனது ஆதிக்கத்தைத் தொடரவுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் இரண்டு முழு நீள திரைப்படத்துக்கான உலகளாவிய காப்புரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து டெட் லைன் இணையதளத்தில் வெளியான செய்தியில், "கனடாவின் டொரண்டோவில் கடந்த வாரம் நடைபெற்ற திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட `தி எலிபன்ட் க்வீன்' திரைப்படத்தின் காப்புரிமையை ஜாக் வான் ஆம்பர்க், ஜாமி எர்லிச் ஆகியோர் அடங்கிய ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய வீடியோ பிரிவுக் குழு கைப்பற்றியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கும் யானைக் கூட்டத்தை வழிநடத்திச் செல்லும் அதேனா எனும் யானையின் வாழ்க்கையைச் சொல்வதுதான் `தி எலிபன்ட் க்வீன்' படத்தின் கதை. இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவரான டாம் மூரே இயக்கிய திரைப்படம் `தி வொல்ப் வாக்கர்ஸ்'. அயர்லாந்தின் காட்டுப் பகுதிகளில் வசிக்கும் ஓநாய்களை வேட்டையாடச் செல்லும் வேட்டைக்காரருடன் பயிற்சிக்காக அவரது மகனும் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு நடக்கும் சுவாரஸ்யமான அனுபவங்களை இந்தப் படத்தில் அனிமேசன் வடிவில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

வீடியோ ஸ்ட்ரீமிங்கில் முன்னணியில் இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ், ஹுலு உள்ளிட்ட நிறுவனங்களுக்காக விரைவில் ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த தயாரிப்புகளை தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon