மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 நவ 2019

காளிதாஸின் அடுத்த படம்!

காளிதாஸின் அடுத்த படம்!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்துக் கவனம் பெற்றவர் நடிகர் காளிதாஸ் ஜெயராம். நடிகர் ஜெயராமின் மகனான இவர் நடித்திருந்த அந்தப்படத்தில் கமல் ஹாசன் பிரபு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். தொடர்ந்து மலையாளப் படங்களில் கவனம் செலுத்திவரும் அவர் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார்.

அந்தவகையில் அவர் தற்போது இயக்குநர் சந்தோஷ் சிவன் படத்தில் நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய சந்தோஷ் பிரபுதேவா நடித்த உருமி படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். அதையடுத்து இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இதில் மஞ்சு வாரியர், நெடுமுடி வேணு, ஆகியோரும் நடிக்கின்றனர். ஆலப்புழாவில் இதன் படப்பிடிப்பு அக்டோபர் 20 இல் தொடங்குகிறது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon