மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ஜியோ: 2020இல் 40 கோடி வாடிக்கையாளர்கள்!

ஜியோ: 2020இல்  40  கோடி வாடிக்கையாளர்கள்!

ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 40 கோடியாக அதிகரிக்குமென்று ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இதுகுறித்து சி.எல்.எஸ்.ஏ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அளித்துள்ள தகவல்படி, ஜூன் மாத இறுதிக் கணக்கின்படி 21.5 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் கொண்டுள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும். இது 14 வயது முதல் 80 வயது வரையிலான இந்திய மக்கள் தொகையில் 45 விழுக்காடாகும்.

நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கும் 4ஜி சேவை மற்றும் ஜியோபோன் விற்பனை போன்றவையே இதற்கு முக்கியக் காரணமாகும். ஜூன் மாத கணக்குப்படி இதுவரையில் 2.5 கோடி ஜியோபோன்கள் விற்பனையாகியுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.1,500க்கு குறைவான மதிப்பிலான மொபைல்போன்களில் அதிகம் விற்பனையான போன் ஜியோபோன்தான். இந்த போன்களில் வாட்சப் சேவை கிடைப்பதும், இதன் விற்பனை அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon