மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

எத்தனால் விலை உயர்வுக்கு ஒப்புதல்!

எத்தனால் விலை உயர்வுக்கு ஒப்புதல்!

எத்தனால் விலையை 25 விழுக்காடு அளவுக்கு உயர்த்துவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரும்புச் சாறிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் தற்போது லிட்டர் ஒன்றுக்கு 47.5 ரூபாயாக உள்ளது. இதன் விலையை 25 விழுக்காடு உயர்த்த வேண்டுமென்று அத்துறையினர் நீண்ட நாட்களாக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதன் விலையை 25 விழுக்காடு உயர்த்தி லிட்டர் ஒன்றுக்கு ரூ.59.5ஆக நிர்ணயிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “கரும்புச் சாறிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் விலையை 25 விழுக்காடு உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக பயனளிக்கும்’ என்றார். இன்னமும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.13,000 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதில் 40 விழுக்காடு உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே வழங்கப்படாமல் உள்ளது. எத்தனால் உற்பத்தியை அதிகரித்து, எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon