மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 21 ஜன 2020

ஸ்டீல் துறைக்கு உகந்த இடம்!

ஸ்டீல் துறைக்கு உகந்த இடம்!

இரும்பு உருக்குத் தொழில் துறைக்கு 2019ஆம் ஆண்டில் சிறப்பான நாடாக இந்தியா இருக்குமென்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மூடீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இரும்பு உருக்கு உற்பத்தித் தொழிலுக்கு உகந்த இடமாக இந்தியா இருக்கும். இந்தியாவில் ஸ்டீல் தேவை 5.5 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தியும் 7.3 விழுக்காடு முதல் 7.5 விழுக்காடு வரை வளர்ச்சி கண்டு வருகிறது.

கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் வாகன உற்பத்தித் துறைகளில் ஸ்டீல் பொருட்களுக்கு தேவை அதிகரிக்கும். இதனால் 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் ஸ்டீல் தேவையில் வலுவான வளர்ச்சி ஏற்படும். இந்தியாவில் ஸ்டீல் கொள்திறன் மதிப்பும் அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த ஆசிய ஸ்டீல் துறைகளும் நிலையான வளர்ச்சி கண்டு வருகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே காணப்படும் வர்த்தக சிக்கல்களால் சீனாவின் இரும்பு உருக்கு விநியோகம் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பிருப்பதாகவும், அது இந்திய வர்த்தகர்களுக்கு கூடுதல் வாய்ப்பை அளிக்கும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon