மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

‘முத்து’வை முந்திய ‘மகதீரா’!

‘முத்து’வை முந்திய ‘மகதீரா’!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’ திரைப்படம் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு அந்நாட்டில் வெளியானது. அந்த படம் அங்கு நிகழ்த்திய வசூல் சாதனையை முறியடித்துள்ளது ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘மகதீரா’ திரைப்படம்.

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மகதீரா. இப்படத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் பெரிய அளவில் வெற்றியும், வசூலையும் பெற்றது. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வசூலைக் குவித்தது. ஏற்கனவே இப்படம் ஜப்பான் நாட்டில் சப்டைட்டிலுடன் வெளியானது.

இருப்பினும் ‘பாகுபலி2’ படம் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை மனதில் வைத்து ‘மகதீரா’ படத்தை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். தங்கள் மொழியில் படத்தை பார்த்த ரசிகர்கள் மகதீரா படத்தை பாகுபலி படத்தைக் கொண்டாடியது போல் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு மகதீரா நாயகன் ராம் சரண் நன்றி தெரிவித்துள்ளார்.

“நன்றி ஜப்பான். எங்கள் மீது நீங்கள், பொழிந்த அன்புக்கு ஆசீர்வதிக்கப்பட்டதாகவும், தாழ்மையுள்ளதாகவும் உண்மையிலேயே உணர்கிறேன். இது எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக எப்போதும் இருக்கும். இந்த மறக்க முடியாத படத்திற்காக ராஜமௌலிக்கு மிகப் பெரிய நன்றி. படம் வந்து 10ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை" என்று கூறியுள்ளார்.

டப்பிங் செய்து வெளியான முதல் வாரத்தின் முடிவில் இப்படம் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இதனால் இந்திய திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது மகதீரா. இதற்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியான ‘முத்து’ திரைப்படமே அதிக வசூல் பெற்ற படமாக இருந்தது. தற்போது இந்த வசூலையும் முந்தியுள்ளது மகதீரா. இப்படத்தின் பெயரில், பிஸ்கட், சாக்லேட்டுகள் ஜப்பான் நாட்டில் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon