மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

தமிழ்ப் பெண்ணுக்கு இளம் அறிஞர் விருது!

தமிழ்ப் பெண்ணுக்கு இளம் அறிஞர் விருது!

அமெரிக்காவில் படித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ராஜலட்சுமிக்கு, அந்நாட்டின் இளம் அறிஞர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார், சென்னையில் கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். தற்போது, இவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ (நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளைக் கொண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்) சாதனமாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், ஒருவரது உடலைத் தொடாமலேயே, அவர்களது உடலில் ஏற்படும் செயல்பாடுகளைக் கண்டறிய முடியும். இவரது கண்டுபிடிப்பு, உடல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புக்காக, 2018ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது’ ராஜலட்சுமி நந்தகுமாருக்குக் கிடைத்துள்ளது. இந்த விருதுடன், அவர் 5 ஆயிரம் டாலர் (ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்) ரொக்கப்பரிசும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ராஜலட்சுமி நந்தகுமார் கூறுகையில், தொடர்ந்து சுவாசம், இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் ரீதியிலான சமிக்ஞைகளைக் கண்டறிவதற்கான வழியைக் கண்டுபிடிக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். “இந்து விருது, இந்த துறையில் மேலும் சிறந்து விளங்குவதற்கும், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், என்னை ஊக்குவிக்கிறது” என்று அவர் கூறினார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon