மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

தமிழுக்கு வரும் மற்றுமோர் அர்ஜுன் ரெட்டி பிரபலம்!

தமிழுக்கு வரும் மற்றுமோர் அர்ஜுன் ரெட்டி பிரபலம்!

அர்ஜுன் ரெட்டி கீதா கோவிந்தம் போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்ற பிரபலம் ஒருவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் திடீர் அலையை ஏற்படுத்தியிருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. சமீபத்தில் அவர் நடித்து வெளியான அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் போன்ற படங்கள் வசூலில் சாதனை புரிந்துள்ளன. அவரது தாக்கம் தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக முன்னணி தெலுங்கு நடிகர்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு தமிழ்நாட்டில் கீதா கோவிந்தம் படம் ரிலீஸானபோது கொடுக்கப்பட்டதைக் காண முடிந்தது.

இதற்கிடையே நோட்டா எனும் படம் வாயிலாக நேரடியாகவே தமிழுக்கு இவர் எண்ட்ரி ஆவதால் தனக்கான இடத்தை இன்னும் அழுத்தமாக தக்கவைப்பார் எனத் தெரிகிறது. இப்படியாக அர்ஜுன் ரெட்டி கீதா கோவிந்தம் போன்ற படங்கள் வாயிலாக தமிழில் இவர் கவனம் பெற்றுள்ள நிலையில் அந்தப் படத்தில் நடித்த மற்றொரு பிரபலமும் தற்போது தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்.

அந்தவகையில் அறிமுகம் ஆக இருப்பவர் நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா. மகேஷ் பாபு நடித்த பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தமிழில் கார்த்திக் ராஜு எனும் இயக்குநர் இயக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகவிருக்கிறார். சந்தீப் கிஷன் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். ராகுல் ராமகிருஷ்ணா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon