மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

மனநோய்க்கும் காப்பீடு!

மனநோய்க்கும்  காப்பீடு!

உடல்நோய்கள் போன்றே மனநோய்களுக்கும் காப்பீடு பொருந்தும் என்று இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு ஆணையம் தெரிவித்துள்ளது மருத்துவர்கள், மனநோய் மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு ஆணையம் காப்பீட்டாளர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில் உடல்நோய்களுக்கும் மனநோய்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தெரிவித்திருந்தது. அதனால் மனநோயாளிகளுக்கும் காப்பீடு அளிக்க வேண்டும் என அனைத்துக் காப்பீடு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக மனநோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது:

இது வரவேற்கத்தக்க அற்புதமான நடவடிக்கையாகும். உடல்நோயும் மனநோயும் வெவ்வேறல்ல என்று கூறியிருப்பது மனநோய் குறித்த சமூக களங்கத்தை நீக்கும் நடவடிக்கையாகும். அது மனநலத்தோடு வாழ்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இருப்பினும். இந்த நடவடிக்கையானது திட்டமிடல் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு ஆணையத்தின் உத்தரவை எப்படி அனைத்துக் காப்பீடு நிறுவனங்களும் அமல்படுத்தப் போகின்றன என்பது குறித்து எந்த வழிகாட்டுதலும் இல்லை.

காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள மனநோய்களைக் கண்டறிவது மற்றும் அவை குறித்து புள்ளிவிவரக் கையேட்டை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை உள்ளவர்கள், குழந்தைகளுக்கு வரும் மனநோய்கள், முதியவர்களுக்கான மனநோய்கள் எனப் பிரித்து புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon