மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

2.O: டீசருக்கே டிக்கெட்!

2.O: டீசருக்கே டிக்கெட்!

டீசர், ட்ரெய்லரை வெளியிட்டுப் பார்வையாளர்களைத் திரையரங்குக்கு அழைத்து வர தயாரிப்பு நிறுவனங்கள் ரொம்பவே மெனக்கெடுகின்றன. இந்நிலையில் 2.O படத்தின் டீசரைப் பார்க்கத் திரையரங்குக்கு வர அழைப்பு விடுத்துள்ளனர்.

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.O திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் புரொமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பிலேயே உள்ள 2.O திரைப்படத்தின் போஸ்டர்களைப் படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் 13ஆம் தேதி டீசர் வெளியாக உள்ள நிலையில் அதுகுறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது 2.O. ஆனால், இதை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறார்கள் என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. தமிழகத்தில் பல திரையரங்குகள் தொழில்நுட்ப வளர்ச்சி அடையவில்லை என்பதே அதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில் படத்தின் டீசரை செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருந்தார். அன்றைய தினம் இணையத்தில் வெளியாவதோடு திரையரங்குகளிலும் ஒளிபரப்பப்படவுள்ளன.

சத்தியம், பிவிஆர் ஆகிய திரையரங்குகளில் இலவசமாக 2.O படத்தின் டீசரை 3டி வடிவில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 9099949466 என்ற எண்ணுக்குப் பார்வையாளர்கள் மிஸ்டு கால் கொடுத்தால் அருகிலுள்ள சத்யம், பிவி.ஆர் திரையரங்குகளில் டீசரைப் பார்ப்பதற்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டீசருக்கான ஒலிக்கலவை பணிகளை முடித்து அனுப்பியுள்ளதாக ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon