மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

நடிகைகளுக்கு வயது முடிவல்ல: பூமிகா

நடிகைகளுக்கு வயது முடிவல்ல: பூமிகாவெற்றிநடை போடும் தமிழகம்

நடிகைகளின் வயதுக்கேற்றவாறு, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதைகள் உருவாக வேண்டும் என்று நடிகை பூமிகா கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய திரையுலகில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்துள்ளவர் நடிகை பூமிகா. 2000ஆம் ஆண்டு வெளியான ‘யுவகுடு’என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் நடிகர் விஜய் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான ‘பத்ரி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ‘ரோஜாக் கூட்டம்’ என்ற படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இருந்தபோதிலும் தமிழில் பெரிய அளவில் தனக்கான படம் வராததால் தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தினார். இருப்பினும் சூர்யாவுடன் இணைந்து நடித்து, 2005ஆம் அண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் இவருக்கு நல்ல பெயரைத் தமிழ் ரசிகர்களிடம் பெற்றுத்தந்தது.

அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘யூ டர்ன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார் பூமிகா. இந்தப் படம் நாளை (செப்டம்பர் 13) வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பூமிகா, “இந்தப் படத்தில் குறைந்த காட்சிகளில் வந்தாலும், நிறைவான கதாபாத்திரம். இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்.

40 வயது ஆகிவிட்டால் இங்கு நடிகைகளை அக்கா, அண்ணி, அம்மா பாத்திரங்களில் நடிக்க அழைக்கிறார்கள். 40 வயது என்பது முடிவல்ல. அந்த வயதிலும் நடிகைகள் இளமையாகவும் ஹாட்டாகவும் இருக்கிறார்கள். இந்தி நடிகை வித்யா பாலனை பாருங்கள். அவருக்கு நாற்பது வயதுக்கு மேலாகிறது. இன்னும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்கிறார். அதேபோல மலைக்கா அரோராவும் நாற்பது வயதைத் தாண்டியவர்தான். இன்னும் அவர் பாலிவுட்டில் ஹாட் நடிகையாக இருக்கிறார். அதே போன்ற மாற்றம் இங்கும் வரும் என்று நம்புகிறேன். 40 வயதுக்கு ஏற்ப நடிகைகளுக்கும் கதைகளை உருவாக்க வேண்டும்” என்றார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon