மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு ஊக்கத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

அங்கன்வாடி ஊழியர்கள், அங்கீகாரம் பெற்ற சமூகநல ஆர்வலர்களுடன் (ஆஷா) காணொளிக் காட்சி வழியாகப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்வு செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய நரேந்திர மோடி, ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் இலவசக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு ஊக்கத் திட்டங்கள் மற்றும் ஊதிய உயர்வுகளை அறிவித்துள்ளார்.

காணொளிக் காட்சியில் மோடி பேசுகையில், “ஆஷா, அங்கன்வாடி மற்றும் ஏஎன்எம் (துணை செவிலியர்கள்) ஊழியர்கள் எந்தவிதமான பிரீமியமும் செலுத்தாமல் ரூ.4 லட்சம் வரையிலான காப்பீடுகளைப் பெறலாம். மேலும், இதுவரையில் ரூ.3,000 ஊதியமாகப் பெற்றவர்கள் இனிமேல் ரூ.4,500 பெறுவார்கள். ரூ.2,200 பெற்றவர்கள் இனிமேல் ரூ.3,500 பெறுவார்கள். இதுவரையில் ரூ1,500 பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் இனிமேல் ரூ.2,500 பெறுவார்கள். நாட்டின் அடித்தளத்தை வலுவாக்குவதில் ஆஷா மற்றும் அங்கன்வாடிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

பிறந்த குழந்தைகளுக்கு சுகாதாரத்தை உறுதிப்படுத்துதல், ஊட்டச்சத்து நிலைகளை மேம்படுத்துதல், தூய்மையைப் பேணுதல் போன்றவற்றிலும் இதன் பங்கு முக்கியமானது” என்றார். இந்த ஊக்கத் திட்டங்கள் யாவும் அக்டோபர் மாதம் முதலும், ஊதிய உயர்வுகள் நவம்பர் மாதம் முதலும் அமலுக்கு வருகின்றன.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon