மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: பெண்களுக்கு வாழ்வளிக்கும் காசிமேடு மீன் சந்தை!

சிறப்புக் கட்டுரை: பெண்களுக்கு வாழ்வளிக்கும் காசிமேடு மீன் சந்தை!

கிருத்திகா ஸ்ரீனிவாசன் & கவிதா முரளீதரன்

வெளியாட்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தைப் பார்த்தால் வித்தியாசமாகத் தோன்றும். நகரின் மற்ற பகுதிகளில் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்க மாட்டார்கள். காசிமேடு மீன்பிடித் துறைமுகமானது 300 ஆண்டுகள் பழைமையானது. வடசென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பகுதி இது.

புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன்களைப் பரபரப்பாக விற்றுக்கொண்டிருக்கும் பெண்கள், அதேநேரத்தில் படகிலிருந்து மீன்களை இறக்கி ரிக்‌ஷாக்களில் ஏற்றிக்கொண்டிருக்கும் ஓட்டுநர்கள் என மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் காசிமேடு துறைமுகம். பெரிய பேரல்களில் தூண்டில்களைக் கழுவி, அவற்றை கண்டெய்னர்களில் இளைஞர்கள் அனுப்புவதையும் அங்கே காணலாம். இதற்கு மத்தியில் இருசக்கர வாகனங்களில் சூடாக தேநீர் விற்கும் ஆட்களையும் இங்கே காணலாம்.

பெரும்பாலும் ஆண்கள் கடலிலிருந்து மீன் பிடித்து வருவதையும், பெண்கள் அதை விற்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மீன் ரகங்களின் பெயர்களைக் கூறி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் பெண்களின் குரல் ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு சந்தை முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும். 38 வயதான பெண் வஞ்ச ராகு. இவர் காசிமேடு சந்தையில் மீன் விற்பனை செய்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். கடந்த 10 ஆண்டுகளாக இத்தொழிலில் இவர் ஈடுபட்டு வருகிறார். “நான் இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவொற்றியூரில் வசித்து வருகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து மீன் விற்பேன்” என்கிறார் அவர்.

இறால் விற்பனைக்கான தனது பணியை மேற்கொண்டிருந்தார் வஞ்ச ராகு. ஞாயிற்றுக்கிழமைகளில் 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் இறால் வாங்குகிறார். “நாள் முடிவில் செலுத்த வேண்டிய பாக்கியெல்லாம் போக 1000 ரூபாய் கிடைக்கும்” என்கிறார் வஞ்ச ராகு. 50 வயது நிரம்பியவர் சாந்தம்மா. தனது குழந்தைப் பருவம் முதல் காசிமேடு சந்தைக்கு மீன் விற்க வருகிறார். “நாங்கள் எல்லாம் இங்கு ஒன்றாக வளர்ந்தோம். அதனால் எங்களுக்குள் எந்தவிதமான போட்டியும் இல்லை” என்கிறார் சாந்தம்மா.

இதே கருத்தையே 40 வயதான காஞ்சனா மாறனும் முன்வைக்கிறார். “நான் குழந்தைப் பருவம் முதலே இங்கு வருகிறேன். அப்போது என் தாயுடன் வருவேன். அவருக்கு அருகில் அமர்ந்து வாடிக்கையாளர்களை மீன் வாங்க அழைப்பேன். இப்போதே நானே மீன் விற்கிறேன்” என்கிறார் இவர். இவரும் இங்கேயே ஏலத்தில் மீன் வாங்கி விற்பனை செய்கிறார். ஆனால் அன்றைய தினம் விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது. அன்று பவுர்ணமி (முழு நிலவு) என்பதால் பலர் இறைச்சி சாப்பிட மாட்டார்கள். இதுவே அன்றைய மந்த நிலைக்குக் காரணம்.

இவ்வாறு விற்பனையாகாத மீன்களைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க ஐஸ் பெட்டிகளில் வைத்துப் பாதுகாக்கின்றனர். பின்னர் அவற்றை அடுத்த நாள் விற்றுக்கொள்கின்றனர். இதுபோன்ற நாட்களில் ஏலத்தில் மீன் வாங்குவதற்காகப் பெற்ற கடனை மாலையில் திரும்பக் கொடுப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். காஞ்சனா அவருடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் உறுதியுடன் இருக்கிறார். “நான் மீன் விற்பதை நிறுத்த மாட்டேன். இப்போது ஞாயிற்றுக்கிழமைகளிலும், மற்ற வார நாட்களிலும் மிகவும் கடுமையாக உழைக்கிறேன். இதெல்லாம் என் குழந்தைகளைப் படிக்க வைத்து அவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்கித்தர வேண்டும் என்பதற்காகத்தான்” என்கிறார் அவர்.

மீன்களில் ஃபார்மாலின் கலக்கப்படவில்லை என்று சோதனை நடத்தி தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்த பிறகுதான் சென்னை சந்தைகளில் மீன் விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. ஆனால், இப்போது கேரள வெள்ளத்தால் மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார் 40 வயதான ராணி ஆறுமுகம். “கேரள வெள்ளம் சந்தையில் விற்பனையைப் பாதித்துள்ளது. அங்கு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு கவலையை அளிக்கிறது. ஆனால், அவர்கள் விரைவில் அதிலிருந்து மீண்டு வருவார்கள் என்று நம்புகிறோம்” என்கிறார் அவர்.

இவ்வாறு நூற்றுக்கணக்கான பெண்கள் காசிமேடு சந்தையில் மீன் விற்கின்றனர். அவர்களைத் தவிர பல பெண்கள் சிறு சிறு வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மினி ஸ்டால்கள் (சிறு கடைகள்) வைத்து உப்பு, பிளாஸ்டிக் கவர்கள், கத்திகள் மற்றும் பிளேடுகள் போன்றவற்றை விற்கின்றனர். அந்தக் கூட்டத்துக்கு நடுவே சிலர் துணிகள், செருப்புகள் மற்றும் அணிகலன்கள் ஆகியவற்றை விற்பனை செய்கின்றனர். இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு மீன்களைக் கழுவி சுத்தம் செய்து வெட்டித் தரும் பணிகளிலும் பல பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் நாள் ஒன்றுக்கு ரூ.400 வருவாய் ஈட்டுகிறார் சரோஜா குப்புராஜ். “நான் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வருகிறேன். நான் காலை 7 மணிக்கு வருவேன். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் வரை இங்கு இருப்பேன்” என்கிறார் அவர்.

காசிமேடு மீன் சந்தை கடந்த 300 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரத்திற்கு வருவாய் ஈட்ட உதவி வருகிறது. ஆனால், இந்த வருவாய் குறைவானதுதான். இருப்பினும் பெரும்பாலான பெண்களுக்கு அது வாழ்வாதாரத்தை விட அதிகமேயாகும். அவர்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள காசிமேடு மீன் சந்தை அவர்களுக்கு உதவுகிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

கிருத்திகா ஸ்ரீனிவாசன் - சமூகவியல் பின்னணி கொண்ட சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர்.

கவிதா முரளீதரன் - ஊடகவியலாளர்

படங்கள்:கிருத்திகா ஸ்ரீனிவாசன்

நன்றி: தி வயர்

தமிழில்: பிரகாசு

நேற்றைய கட்டுரை:வேலை உருவாக்கம் என்னும் கட்டுக்கதை!

மின்னஞ்சல் முகவரி: [email protected]

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon