மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

தேதி சொன்ன ஜானு - ராம் டீம்!

தேதி சொன்ன ஜானு - ராம் டீம்!

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் 96 படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

த்ரிஷாவுடன் முதன்முறையாக விஜய் சேதுபதி ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 96. 1996ஆம் ஆண்டு நடந்த சில சம்பவங்கள் படத்தின் மையக்கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. ‘ராம்’ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் ‘ஜானு’ எனும் கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர்ஸ், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன.

குறிப்பாக கோவிந்த் வசந்த் இசையில் அமைந்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் பல இணையவாசிகளின் ரிப்பீட் மோடு லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக இயங்கிய அறிமுக இயக்குநர் பிரேம் இயக்கியுள்ளார்.

தொடர்ச்சியாக விஜய் சேதுபதி நடித்த படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருவதால் இந்தப் படம் எப்போது திரைக்கு வரும் எனத் தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்தப் படம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அதாவது அக்டோபர் 4ஆம் தேதி திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon