மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

ரெடி, ஸ்டெடி, விளையாடு!

ஹாய் குட்டீஸ். இத்தனை நாளா எந்த ஒரு பொருளாதார தேவையும் இல்லாத, மண்ணுக்கும் மனசுக்கும் நெருக்கமான பல விளையாட்டுகளைப் பார்த்தோம். அவை இயற்கையைப் பாதிக்காமல் உடலுக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியவை.

இந்த விளையாட்டுகள் எல்லாம் ச்சும்மா சாம்பிள்தான். உங்களோட ஆர்வத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. குட்டீஸ் நிறைய பேர் ஒண்ணா சேரும்போது, நீங்களே புதுசா நிறைய விளையாட்டுகளை உருவாக்கலாம். அப்படி நீங்களே உருவாக்குற விளையாட்டுகளுக்கு ஒரு முக்கியமான விதி இருக்கணும். இயற்கையைச் சீரழிக்காத பொருட்களைக் கொண்டு விளையாடுவது. அதுதான் அந்த விதி!

நாம இந்தப் பகுதியில பார்த்தது இல்லாம, பல்லாங்குழி, தாயம், சதுரங்கம், பரமபதம், ஆடு புலி ஆட்டம்னு இன்னும் பல்வேறு விளையாட்டுகள் இருக்கு. அவை எல்லாம் உங்களை சுற்றியேதான் இருக்கு. வணிக விளையாட்டுகளை ஒதுக்கி வெச்சிட்டு தேடுனா அவ்ளோ சுவாரஸ்யமான விளையாட்டுகள் நம்மள சுத்தி இருப்பதைத் தெரிஞ்சிக்கலாம்.

அப்படி உங்களுக்குத் தெரிஞ்ச உள்ளூர் விளையாட்டுகள், நீங்க கண்டுபுடிச்ச விளையாட்டுகள்னு எதுவா இருந்தாலும் அதை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்க. தேர்ந்தெடுக்கப்படுற விளையாட்டுகள் உங்கள் புகைப்படத்துடன் வெளியிடப்படும்!

அறிவியல் பக்கம் தலை வெச்சு ரொம்ப நாள் ஆச்சு இல்லையா... வாங்க அங்கே ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோம்!

- நரேஷ்

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon