மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

ராஜா ரங்குஸ்கி: மூன்று போலீஸ், ஒரு மர்மம்!

ராஜா ரங்குஸ்கி: மூன்று போலீஸ், ஒரு மர்மம்!

மெட்ரோ புகழ் ஷ்ரிஷ் கதாநாயகனாக நடித்துள்ள ராஜா ரங்குஸ்கி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுவருகிறது.

பர்மா, ஜாக்சன் துரை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் தரணிதரன், தற்போது இயங்கிவரும் படம் ராஜா ரங்குஸ்கி. இதில் மெட்ரோ படம் வாயிலாகக் கவனம் ஈர்த்த ஷ்ரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சித்து ப்ளஸ் டூ புகழ் சாந்தினி நடித்துள்ளார்.

செப்டம்பர் 21ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் நேற்று (செப்டம்பர் 11) இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. குற்றச்சம்பவமும் அதை பல்வேறு கோணங்களில் கண்டறியும் காவல் துறையின் அணுகுமுறையுமாக விரியும் இந்த ட்ரெய்லர் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லருக்கே உரிய கூறுகளை உள்ளடக்கிப் பயணிக்கிறது.

மூன்று காவல் துறை அதிகாரிகள், ஒரு மர்ம சம்பவம், அதையொட்டிய பல்வேறு முகங்கள் எனக் காட்டப்பட்டிருக்கும் இந்த ட்ரெய்லர் படம் பார்க்கும் ஆவலை ரசிகர்களிடம் தூண்டும் விதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரெய்லரில் வரும் பின்னணி இசையைக் கவனிக்கும்போது யுவன் ஷங்கர் ராஜாவின் தேர்ந்த மிரட்டலான இசை, இந்தப் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என நம்பும்படி அமைந்துள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon