மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சத்தமில்லாமல் முடிவடைந்த சந்தானம் படம்!

சத்தமில்லாமல் முடிவடைந்த சந்தானம் படம்!

தான் நடித்துவரும் ‘தில்லுக்கு துட்டு-2’ படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சந்தானம்.

காமெடியில் கலக்கிவந்த நடிகர் சந்தானம், நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என ஏதும் முடிவெடுத்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை, தொடர்ச்சியாக பல படங்களில் தன்னை கதாநாயகனாகவே புக்கிங் செய்து நடித்துவருகிறார். அவ்வகையில் அவரது கைவசத்தில் சர்வர் சுந்தரம், தில்லுக்கு துட்டு-2, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி போன்ற படங்கள் உள்ளன.

இந்த நிலையில் தில்லுக்கு துட்டு-2 படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சந்தானம். அதன்படி தில்லுக்கு துட்டு-2 படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளன. இதைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், பல நாட்களுக்குப் பின்னர் தாடி இல்லாமல் தோன்றும் தனது புதிய லுக்கானது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பரோடி வகை நிகழ்ச்சியான லொள்ளு சபாவை இயக்கியதன் வாயிலாக கவனம் ஈர்த்தவர் ராம்பாலா. இவருடைய இயக்கத்தில்தான் இந்தப் படத்தின் முதல் பாகமான தில்லுக்கு துட்டு, ஹாரர் காமெடி வகைப்படமாக உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon