மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

ஐ.டி.யில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

ஐ.டி.யில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!

இந்தியாவின் முன்னணி ஐந்து ஐடி நிறுவனங்கள் புதிதாக 24,047 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.

அமெரிக்க விசா கட்டுப்பாடுகள், தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் அதிகரிப்பு, கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற காரணிகளால் 2017-18ஆம் நிதியாண்டில் ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் கடுமையாகக் குறைந்தன. ஏற்கெனவே வேலைவாய்ப்பு பெற்றிருந்தவர்களுக்கும் நெருக்கடிகள் அதிகரித்தன. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூலையில் முன்னணி 5 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.

இதுகுறித்து மிண்ட் செய்தி நிறுவனத்தின் ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (டி.சி.எஸ்.), காக்னிசண்ட் டெக்னாலஜி சொலூசன்ஸ் கார்பரேசன், இன்ஃபோசீஸ் லிமிடெட், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல். ஆகிய 5 நிறுவனங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் கூடுதலான வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன.

முதல் காலாண்டில் டி.சி.எஸ். நிறுவனம் 5,877 வேலைவாய்ப்புகளையும், காக்னிசண்ட் நிறுவனம் 7,500 வேலைவாய்ப்புகளையும், இன்ஃபோசீஸ் நிறுவனம் 5,798 வேலைவாய்ப்புகளையும், விப்ரோ நிறுவனம் 832 வேலைவாய்ப்புகளையும், ஹெச்.சி.எல். நிறுவனம் 4,040 வேலைவாய்ப்புகளையும் அளித்துள்ளது. மொத்தமாக இந்த நிறுவனங்கள் அளித்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 24,047. இது கடந்த ஆண்டில் 13,772 ஆக மட்டுமே இருந்தது’ என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டில் டி.சி.எஸ். நிறுவனம் 7,775 வேலைவாய்ப்புகளையும், இன்ஃபோசீஸ் நிறுவனம் 3,743 வேலைவாய்ப்புகளையும், ஹெச்.சி.எல். நிறுவனம் 4,108 வேலைவாய்ப்புகளையும் வழங்கியிருந்தது. அதேசமயத்தில் காக்னிசண்ட் நிறுவனம் 200 பேரையும், விப்ரோ நிறுவனம் 1,654 பேரையும் குறைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon