மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 16 செப் 2019

நிர்மலா தேவி ஜாமீன்: விசாரணை ஒத்திவைப்பு!

நிர்மலா தேவி ஜாமீன்: விசாரணை ஒத்திவைப்பு!

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகனின் ஜாமீன் மனு மீதானவிசாரணை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, சில மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோவெளியானதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் கைதானார்.

நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தபேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட நீதிமன்றங்களில் இவர்கள் மூன்று பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து வந்தனர். ஆனால், இதுவரை மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன்கிடைக்கவில்லை. இதையடுத்து, இவர்கள் மூவரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நிர்மலா தேவி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 12) நிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வந்தது. அப்போது மனுதாரரின்வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதையடுத்து, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் செப்டம்பர் 24ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon