மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சவுதியிலிருந்து இறக்குமதியை அதிகரித்த இந்தியா!

சவுதியிலிருந்து இறக்குமதியை அதிகரித்த இந்தியா!

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 16 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது.

இதுகுறித்து கப்பல் மற்றும் தொழில் துறை அதிகாரிகள் ராய்டர்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள தகவலில், “ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா நாள் ஒன்றுக்கு 4.7 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் 16 விழுக்காடு அதிகமாகும். இந்தியாவுக்கு அதிக எண்ணெய் விநியோகம் செய்த நாடுகளில் ஈராக் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. இருப்பினும் ஜூலை மாதத்தைக் காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யின் அளவு குறைந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில், சரிபாதி அளவுக்கு இந்த இரு நாடுகளிலும் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி அளவு அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் நைஜீரிய எண்ணெய் இறக்குமதி அளவு 18.5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாகக் குறைந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளிலிருந்து 13.5 விழுக்காடு அளவிலான எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது ’ என்று தெரிவித்துள்ளனர். உலகின் 3ஆவது மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon