மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

உணவகங்களுக்கு நிபந்தனை: மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

உணவகங்களுக்கு நிபந்தனை: மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கணேஷ் பிரபு என்பவர், உணவகமொன்றில் இரவு 10 மணி அளவில் உணவருந்தச் சென்றபோது, காவல் துறையினர் அந்த உணவகத்தை மூடச்சொன்னதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே காவல் துறை தலையிட்டு கடைகளை மூட வேண்டும். ஆனால் உணவகங்கள் அனைத்தும்மாநகராட்சி கட்டுப்பாட்டில் வருகிறது. உணவகங்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்” என்றுகுறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தவழக்கில் மாநகராட்சி ஆணையரை எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டனர் நீதிபதிகள். சென்னையில் எந்தெந்த பகுதியில் எத்தனை மணி நேரம் கடைகள்திறந்திருக்க வேண்டும் என்பது குறித்த நிபந்தனைகளை உருவாக்குமாறு சென்னை மாநகராட்சியிடம் அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கை அக்டோபர் 3ஆம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon