மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

ஆமா, இவுங்கள்லாம் எங்கீருந்து வர்றாங்க? :அப்டேட் குமாரு

ஆமா, இவுங்கள்லாம் எங்கீருந்து வர்றாங்க? :அப்டேட் குமாரு

பெட்ரோல், டீசல் விலை ஏறுனது தொடர்பா சோஷியல் மீடியாவுல பல பேர் கொந்தளிச்சுப் போஸ்ட்டுகள் போட்டுக்கிட்டு இருக்காங்க. அதே நேரத்துல சில க்ரூப்ஸ் விலை ஏறினா ஏத்துக்கிட்டுதான் ஆகணும்னு சொல்றதோட மட்டுமில்லாம, அதுபத்தி பெருசா தத்துவ விளக்கமும் வேற சொல்றாங்க. சரி என்னதான் அப்படி சொல்லிருக்காங்கனு போயிப் பாத்தா ஒரே கொட்டாவிதான் வருது.

ஹ்ம்ம்ம்...பெட்ரோல் டீசல் விலையை இன்னும் ரெண்டு ரூபாய் எக்ஸ்ட்ரா ஏத்துனாக்கூட, மனசைக் கல்லாக்கிக்கிட்டுத் தாங்கிக்கலாம்போல, விளக்கம்ங்கிற பேர்ல இவங்க கொடுக்கறாங்க பாருங்க ஒரு ‘வெளக்கம்’ அதைத்தான் தாங்க முடியல. அய்யய்யய்யூ....

@Kozhiyaar

எவ்வளவு டீசன்ட்டா உட்கார்ந்திருந்தாலும், பந்தி ஆரம்பிச்சாச்சுன்னு ஒரு குரல் வந்த உடனே நமக்குள்ள இருக்கிற ஆதிமனிதன் குபீர்னு வெளிய வந்திடுறான்!!

@rahimgazali

என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை எனில் திமுக தலைவர் பதவியை மு.க.அழகிரியிடம், ஸ்டாலின் கொடுக்கத் தயாரா? -எஸ்.பி.வேலுமணி

ஒருவேளை நிரூபிக்கப்பட்டுவிட்டால் உங்கள் அமைச்சர் பதவியை அழகிரியிடம் கொடுத்திடுவீங்களா?!

@HAJAMYDEENNKS

சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீசாகிறது மெர்சல் - செய்தி

சீனாவுக்கு போய் படத்தை வெளியிடக்கூடாதுன்னு நடுரோட்டில் போராடினால் உலகளவில் பிரபலமாக வாய்ப்பு இருக்கு தமிழிசைக்கு !

@gips_twitz

’நான் விரும்பும் தலைவர் விஜய் என விடைத்தாளில் எழுதிய மாணவர்- செய்தி

நல்லவேளை ஆர்மிய பத்தி கேக்கல கேட்டிருந்தா ஓவியா ஆர்மினு எழுதிருப்பானுக...

@Kozhiyaar

ஒரு கட்டத்திற்கு மேல் தம் திருமணத்திற்கு தாமே வரன் தேடும் நிலை கொடூரமானது!!!

@Kadharb32402180

30 ஓவாய்க்கு பெட்ரோல் போட சொன்னா குணமா போடனும் அதவிட்டுட்டு மேலயும் கீழயும் பாக்க கூடாது...!!

பெட்ரோல்விலை பரிதாபங்கள்

@ajay_aswa

ஓட்டுக்கு பணம் அளிப்பதும் வாங்குவதும் குற்றம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இனி வரும் தேர்தலில் எங்களிடம் ஓட்டுக்கு பணத்தை எதிர்பார்க்காதிங்கன்னு சொல்ல வர்றார் போல..!

@Kozhiyaar

சில கடைக்கு போனா வயிறு நிறையுதோ இல்லையோ, அந்த பரோட்டா மாஸ்டரும், ப்ரைடு மாஸ்டரும் பண்ற வித்தையில கண்ணு நிறையுது!!!

@Kannan_Twitz

காந்தி கணக்கு இஸ் எ வேர்ட்,

மோடி ஜீ கணக்கு இஸ் ஆன் எமோசன்.

@Thaadikkaran

சுவாமி விவேகானந்தரின் உத்வேகத்துடன் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்# அய்யா இதுக்குமேல உடம்புல தெம்பு இல்லீங்க

@nandhu_twitts

"பழியை" அடுத்தவர்கள் மீது போட்டு விட்டு..

"பாவத்தை" தான் சுமக்க ஆரம்பித்து விடுகிறார்கள்..!!

@madhavaitz

ஜாதிகள் இல்லையடி பாப்பா

ஓயின்சாப் களில் மட்டும் பொருத்தமாக உள்ளது.

@h_umarfarook

சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது அமெரிக்கா

-இதெல்லாம் எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா ?

@gips_twitz

“இடைத்தேர்தலில் திமுக மற்றும் தினகரன் வெற்றி

பெற வாய்ப்பே இல்லை” - ஆர்.பி. உதயகுமார்

ஆமா ரெண்டு பேர் வெற்றி பெற வாய்ப்பில்லை, ஒருத்தர் தான் வெற்றி பெற முடியும் ...

@Thaadikkaran

முறைகேடான அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் - டி.டி.வி. தினகரன்#அதெல்லாம் அப்றம் இருக்கட்டும் சார், விஜய் டிவில போட்ட படமே திரும்ப போடுறது எப்போ முடிவுக்கு வரும்..!

@2amtughluq

ஏழைகளுக்காகவே பணியாற்றுகிறோம் - பிரதமர் மோடி#அவுங்க எப்போதும் ஏழையாகவே இருக்கத்தானே பணி ஆற்றுகிறீர்கள்

@rahimgazali

தமிழகத்தில் ஈ சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை வெளியீடு

அப்படியே...சிகரெட்டையும் தடை செய்து ஒரு அரசாணை வெளியிடுங்களேன் பார்ப்போம்.

- லாக் ஆஃப்!

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon