மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

நாற்பதுகளைத் துரத்தும் மன அழுத்தம்!

 நாற்பதுகளைத் துரத்தும் மன அழுத்தம்!

விளம்பரம்

நாற்பது வயதானால் நாய்க்குணம் வரும் என்றொரு பழமொழி உண்டு. இதனை அப்படியே ஏற்றுக்கொண்டு, பழமைத்தனம் நிரம்பிய வார்த்தைகளைப் பின்பற்றி வாழ வேண்டுமென்பதில்லை. ஆனால், இதன் பின்னிருக்கும் உண்மையின் சதவீதத்தை உணர்ந்து செயல்படுவது அனைவருக்கும் நல்லது. மற்றவர்களிடம் எரிச்சல் காட்டும் குணம் தொற்றுகிறது என்றால், நம்மில் தங்கியுள்ள மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறோம் என்றே அர்த்தம்.

பொதுவாக, 25-30 வயதுகளில் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் திருமண பந்தத்தில் நுழைகின்றனர். கிட்டத்தட்ட 10 முதல் 15 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் அலுப்பு தட்டுகிறது. ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணமாவதால், இந்த அயர்ச்சி மிகவும் அதிக நிலையில் இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே, நாற்பதுகளை நெருங்கும் ஆண்களும் பெண்களும் புதுவித வாழ்வனுபவங்களைப் பெறத் தயாராகின்றனர்.

தற்போது உடற்பயிற்சி நிலையம், ஏரோபிக்ஸ், நடன வகுப்புகள் உள்ளிட்ட பல பயிற்சிகளுக்குச் சென்று பார்த்தால், நாற்பதுகளை நெருங்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த காலகட்டத்தில், ஆண்கள் தங்களது நட்பு வட்டத்தைப் பெருக்குவதற்கான வழிகளைத் தேடுகின்றனர். சில நேரங்களில் எதிர்பாலின நட்பை விரும்புவதாகவும் இது அமைகிறது. பெண்களும் இதில் விதிவிலக்கில்லை.

வழக்கமான அலுவல்கள், அனுபவங்கள், வாழ்க்கைச்சூழலிலிருந்து விடுபட்டு, புதுவித உலகத்தை எதிர்கொள்வதே இதன் பின்னிருக்கும் நோக்கம். இதனைச் செய்யாதவர்கள் நாய்க்குணத்தைத் தத்தமது சுற்றத்தில் வெளிப்படுத்துகின்றனர் என்பதுவே உண்மை. நாற்பதுகளில் ஏற்படும் இதுபோன்ற அயர்வுகளில் இருந்து விடுபட முடியாதவர்களே, தங்களது நெருடல்களை அடக்க முடியாமல் தத்தளிக்கின்றனர். அவர்களது மனச்சோர்வும் அடக்கமுடியாத எரிச்சலும் வெவ்வேறு திசைகளில் இடம்பெயர்ந்து மனநலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. இம்மாதிரியான இக்கட்டான சூழலிலிருந்து விடுபட, போதுமான மனநல ஆலோசனைகளே அவசியம். மைண்ட் ஸோன் மருத்துவமனை தக்க உளவியல் ஆலோசனைகளுடன், இந்தச் சூழலை எதிர்கொள்ளும் வழிமுறைகளைக் காட்டுகிறது. இதனை மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார் மற்றும் உளவியல் மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு:

மைண்ட் ஸோன் மருத்துவமனை
நம்பர் 58/2, முதல் அவென்யூ,
சாஸ்திரி நகர், அடையார்,
சென்னை – 600020
இமெயில்: [email protected]
அலைபேசி: 044-24460101, 9444297058, 9176055660

விளம்பர பகுதி

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon